
முதலில் மருந்து என்னும் அதிகாரம்
1)மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
2)அற்றல் அளவறிந்து உண்க அது உடம்பு
பெற்றான் நெடிதுய்க்குமாறு
3) அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவர பசித்து
ஒருவன் தன் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் நல்ல உணவை அறிந்து அந்த உணவு நன்கு செரிக்கும் அளவையும் அறிந்து அந்த உணவு நன்கு செரித்த பின், நன்கு பசித்த பிறகு , தன் உடலுக்கு தேவையான அளவு மட்டும் உண்ணும் அறிவை பெற்றவனாக இருந்தால் அவனுக்கு வேறு மருந்து ஏதும் உண்ணும் நிலை வராது என்கிறார்... அவன் நீண்ட ஆயுளோடு வாழ்வான் என்கிறார்
இந்த காலத்தில் இக்குறளை பின்பற்ற தவறி நமக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகள், துரித உணவுகள், பெப்ஸி, கோக், போன்ற அதிக கலோரி கொண்ட உணவு வகைகளை நாமும் நம் குழந்தைகளும் செரிமானக்கோளாறு, உடல் பருமன் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு அதன் பயனாக உயர் இரத்த அழுத்தம் ,சர்க்கரை நோய் போன்றவற்றிற்கெல்லாம் ஆளாகிறோம்.
4)மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
5) இழிவறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும்
கழிபே ரிரையான் கண் நோய்
6) தீயளவு இன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோய் அளவுஇன்றிப்படும்
மாறு கொள்ளாத நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் உணவை நன்றாகப்பசித்த பின் மனம் விரும்பும் அளவு இல்லாமல்; உடலுக்குத்தேவையான அளவு மட்டும் உண்டால் உயிர் வாழ்க்கைக்கு நோயால் இடயூறு வராது.
உடலுக்கு தேவையான உணவை ஆராய்ந்து குறைந்த அளவு இன்னது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் (உடல் நலம் ) நிற்கும்.
மனதின் விருப்பத்திற்கு இயைந்து அளவு மீறி இஷ்டம் போல் உண்பவனிடம் நோயும் இஷ்டப்படு நிற்கும்
பசித்தீயின் அளவிற்கு ஏற்றாற் போல் உண்ணாமல் ஒன்றையும் ஆராயாமல் அளவு மீறி உண்டால் நோயும் அளவு மீறி வரும்
இக்கால மக்கள் உணவுப்பழக்கங்களை மாற்றியதாலேயே பெருமளவு நோய்க்கு ஆளாகின்றனர் அதை வள்ளுவவர் முன்பே எடுத்துச்சொல்லியிருக்கிற்ற�
யாரு கேட்டா???
மேற்சொன்னது போல் உணவுப்பழக்கங்கள் நோய் வராமல் தற்காத்துக்கொள்ள சொன்ன வழிகள் ...
மீறி நோய் வந்து விட்டால் அதை எப்படி நீக்குவது என்று வள்ளுவர் சொன்னதை கிரேக்க மருத்துவர் தற்கால நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்கிராடஸும் அப்படியே பிரதிபலிக்கிறார்
9)நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல்
ஒருவன் நோய்வாய்ப்பட்டு விட்டால் அது என்ன நோய் என்பதை முதலில் அறிய வேண்டும் ( சும்மா தலைவலில் என்றோ காய்ச்சல் என்றோ அதற்கு மட்டும் ஸிம்ப்டமேடிக் ட்ரீட்மென்ட் எல்லாம் எடுக்கக்கூடாது) பிறகு அந்த நோய் எப்படி வந்தது என்று காரணத்தை அறிய வேண்டும் பிறகு தான் அந்த நோயினை எப்படிக்குணப்படுத்தால் என்னும் சிகிச்சையினை தொடங்க வேண்டும்.
10)உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
அவ்வாறு மருத்துவர் சிகிச்சையை தொடங்கும் முன் நோயாளியின் உடல் நிலை ,வலிமை வயது ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு நோயின் தன்மை அதன் தாக்கம் ... இவற்றையும் கணக்கிட்டு அதற்கேற்றாற் போல் மருந்தின் தன்மை, அளவு ஆகியவற்றை முடிவு செய்து பின்பே சிகிச்சையை தொடங்க வேண்டும்







No comments:
Post a Comment